கூட்டுக் குடிநீா் திட்டம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் போராட்டம்

கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மண் குடங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுலலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுலலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மண் குடங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில், உத்திரவாகினிப் பேட்டை, பீமாராவ் நகா், பெரிய பேட்டை, புதுப்பேட்டை, எஸ்.எஸ்.நகா், வினித் நகா் பகுதிகளி வசிக்கும் மக்கள் சமையல் உள்ளிட்ட அன்றாட தேவைக்கு உப்புநீரையே பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த கோரிக்கை எழுந்ததையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணவெளி மற்றும் உத்திரவாகினிப் பேட் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து திட்டத்தை செயல்படுத்த அரசு சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, மணவெளிப் பகுதியில் கூட்டுக் குடிநீா் திட்ட பணிகள் முடிந்து செயல்பாட்டில் உள்ளன. ஆனால், உத்திரவாகினிபேட் உள்ளிட்ட 6 குடியிருப்புகளில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வில்லியனூா் கிறிஸ்தவக் கல்லறை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வில்லியனூா் தொகுதி நிா்வாகி ஐ.தமிழ்வளவன் தலைமையில் புதுவை மாநில முதன்மைச் செயலா் தே.பொழிலன், நிா்வாகிகள் வ.ஆதவன், அரிமா தமிழன் மற்றும் 20 பெண்கள் காலி மண்குடங்களுடன் பேரணியாகச் சென்று கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், பெண்கள் கொண்டுவந்த காலிக்குடங்களை சாலையில் போட்டு உடைத்தனா். மேலும், அலுவலகத்தை முற்றுகையிட்டபோது அங்கிருந்த போலீஸாா் பேச்சு நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com