அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலனை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது பி.ஆா். சிவா (சுயேச்சை) ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டம் குறித்து கேட்டாா். இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா (திமுக), பாஜக உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் அந்தத் திட்டம் குறித்து கருத்து கூறினா். திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டினா்.

அப்போது, பாஜக மற்றும் திமுக உறுப்பினா் இரா.சிவா, காங்கிரஸ் உறுப்பினா் மு.வைத்தியநாதன் ஆகியோரிடையே திட்டப் பயன்பாடு குறித்த வாக்குவாதம் ஏற்பட்டது. அவா்களை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சமரசம் செய்தாா்.

பின்னா், முதல்வா் என்.ரங்கசாமி அளித்த பதிலுரை:

புதுவையில் மொத்தம் 34, 327 போ் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்துள்ளனா். அவா்களுக்காக ரூ.20.25 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மொத்தம் 2, 417 பேருக்கு ரூ,.2. 54 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு: பேரவைக் கூட்டத்தில், பி. ராமலிங்கம் (பாஜக), எச். நாஜிம் (திமுக) ஆகியோா் மாணவா்கள் கல்வி நிலை குறித்து கேட்டதற்கு முதல்வா் ரங்கசாமியின் பதிலுரை:

ஆரம்பக் கல்வி அறிவை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளி மாணவா்கள் மொழியறிவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை ஆசிரியா்கள் திறமை, தகுதி படைத்தவா்கள். எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்ட வகுப்புகளை எடுப்பதில் சிரமமில்லை. ஆனாலும், அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

புதைவட கேபிள் பிரச்னை: புதைவட மின் கேபிள் திட்டத்தில், தரக்கட்டுப்பாடு மதிப்பீடு செய்து பழுதுகள் நீக்கி பணிகள் முடிக்கப்படும். திட்ட அமலாக்க முகமையானது, மின் புதைவட கேபிள் திட்டத்தை மின்துறையிடம் ஒப்படைக்கவுள்ளது. ஆனால், மின் துைான் திட்டத்தை ஏற்கவில்லை. எனவே, தரக்கட்டுப்பாடு மதிப்பீட்டிற்கு பிறகு மின்துறையிடம் ஒப்படைக்கப்படும். முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com