புதுச்சேரியில் ஏப்.29 முதல் கோடை விடுமுறை!

ஏப்.29 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏப்.29 முதல் கோடை விடுமுறை!

புதுச்சேரியில் வெயில் அதிகரிப்பு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வெயிலின் உக்கிரம் அதிகமாகி வருவதன் காரணமாக ஏப். 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வெயில் அதிகரிப்பதன் காரணமாக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இன்றுடன் பள்ளிகள் முடிகின்றன. நாளை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை அதனைதொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்கும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 5 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com