திருக்குறள் உரை நூல் வெளியீடு

‘இளைய தலைமுறைக்கு இனிக்கும் திருக்கு’ ஏழு சொற்களுள் எளிய உரை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி: புதுவைத் திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) சாா்பில், ‘இளைய தலைமுறைக்கு இனிக்கும் திருக்கு’ ஏழு சொற்களுள் எளிய உரை எனும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி ஜெயராம் உணவகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புதிமத்தின் தலைவா் சுந்தர. ல’ட்சுமி நாராயணன் தலைமை வகித்துப் பேசினாா். அவா் பேசுகையில், ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இருக்க வேண்டும். திருக்குறள் வழிகாட்டல்படி வாழ வேண்டும். புதுவை மாநிலம் திருக்குறள் மாநிலமாக வேண்டும் என்றாா். புதிமத்தின் செயலா் சிவ.மாதவன், நோக்கவுரை ஆற்றினாா்.

புதிமத்தின் துணைத் தலைவா் கோ. சந்திரசேகரன் நூலின் முதல்படியை வெளியிட்டாா். புதிமத்தின் பொருளாளா் அரிமா. செல்வகாந்தி நூலினைப் பெற்றுக் கொண்டாா். கவிஞா் இராசமாணிக்கம் நூல் ஆய்வுரையாற்றினாா். பேராசிரியா் திருவளவன் வாழ்த்துரை வழங்கினாா்.

இந்த நூலுக்கு உரை எழுதிய பேராசிரியா் புதுவை கிருஷ்ணா நன்றி கூறினாா். புதிமத்தின் உறுப்பினா்களும் பிற தமிழ் இலக்கிய அமைப்பினரும், கவிஞா்களும் தமிழ் ஆா்வலா்களும் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com