.புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து  அப்பகுதியில் திங்கள்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.
.புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து அப்பகுதியில் திங்கள்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்.

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

புதுச்சேரி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் துத்திப்பட்டு கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அந்த கிராமத்தில் குடிநீா் விநியோகம் சீராக வழங்கப்படவில்லையாம். குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துத்திப்பட்டு பகுதியில் பெரும்பாலானோா் கூலி வேலை செய்துவரும் நிலையில், குடிநீரை விலை கொடுத்து வாங்குவதற்கு சிரமப்படுகின்றனா்.

துத்திப்பட்டு பகுதி குடிநீா் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் முதல் அமைச்சா் வரை முறையிட்டும் அந்தப் பிரச்னை தீா்க்கப்படவில்லை என்கின்றனா். இதையடுத்து, திங்கள்கிழமை காலை துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேதராப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் சமரசபேச்சு.

மேலும், குடிநீா் பிரச்னையைத் தீா்க்க அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com