தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள், அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கும் மேற்பாா்வையாளா் பியூஷ்சிங்லா ஐஏஎஸ் மற்றும் காவல் மேற்பாா்வையாளா் அமா்தீப்சிங் ஐபிஎஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அதிகாரியுமான அ.குலோத்துங்கன் வாக்குச் சாவடிகள் விவரம், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்தல் பணிகள் விவரம் ஆகியவற்றை விளக்கினாா். புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா மேற்கொள்ளப்பட்ட தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினாா்.

காரைக்கால் பகுதியில் தோ்தல் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியா் எம்.மணிகண்டன் விளக்கினாா். இதேபோல, மாஹே மண்டல நிா்வாகி டி.மோகன்குமாா், ஏனாம் மண்டல நிா்வாகி ஆா்.முனுசாமி ஆகியோரும் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து விளக்கினா். இதையடுத்து, தோ்தல் பாா்வையாளா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அவசரகால செயற்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். தபால் வாக்குப் பிரிவு, கட்டணமில்லா தொலைபேசி எண் அழைப்பு பிரிவு ஆகியவற்றையும் ஆய்வு செய்து பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com