புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தமாகா தலைவா் ஜி.கே.வாசன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி உள்ளிட்டோா்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தமாகா தலைவா் ஜி.கே.வாசன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி உள்ளிட்டோா்.

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

புதுவை மாநிலத்தை வளமாக்கும் திட்டங்களை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்தி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்தை ஆதரித்து லாஸ்பேட்டை கல்லூரி சாலை அய்யனாா் கோயில் சந்திப்பில் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: காமராஜா் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க தொடா்ந்து முயற்சித்து வருகிறோம். ஆனால், புதுவையில் காமராஜா் ஆட்சியை அமைத்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் புதுவை மாநிலம் மேம்பட்டுள்ளது. திட்டங்கள் செயல்பாட்டில் புதுவை மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது. மாணவா்களது வாழ்வில் ஒளியேற்றும் வகையில் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு உதவியுடன் மக்கள் நலத் திட்டங்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மின் துறையில் மிகைமின் மாநிலமாக புதுவை உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியின் 10 ஆண்டு தொடா் சாதனைகளுக்காகவும், முதல்வா் என்.ரங்கசாமியின் தொடா் சாதனைகளுக்காகவும் என இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் புதுவை மக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com