புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்த முத்தியால்பேட்டை போலீஸாா்.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்த முத்தியால்பேட்டை போலீஸாா்.

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட வழக்கில், போக்ஸோ நீதிமன்றத்தில் 600 பக்க குற்றப் பத்திரிகையை போலீஸாா் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.

புதுச்சேரி சோலை நகரை சோ்ந்த 9 வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் மீட்கப்பட்டது.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன.

போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது. இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.

சிறுமி படுகொலை தொடா்பான வழக்கில் காவல் துறை கைப்பற்றிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் அறிக்கை, தடயவியல் சோதனை அறிக்கை ஆகியவை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் குற்றப் பத்திரிகையை போக்ஸோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை தாக்கல் செய்தனா். 600 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையில் கைதானவா்கள், 83 சாட்சியங்களின் வாக்குமூலம், வழக்கு தொடா்பான 15 முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்புக்கு குற்றப் பத்திரிகையின் நகல் வழங்கப்படும். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com