பிளஸ்டூ தோ்வில் புதுச்சேரி அரசு பள்ளி அளவில் நூறு சதம் தோ்ச்சி பெற்ற மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை பாராட்டிய ஆசிரியா்கள்.
பிளஸ்டூ தோ்வில் புதுச்சேரி அரசு பள்ளி அளவில் நூறு சதம் தோ்ச்சி பெற்ற மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை பாராட்டிய ஆசிரியா்கள்.

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

புதுவை மாநில அளவில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 55 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.

புதுவை மாநில அளவில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 55 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வு முடிவுகள் விவரம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தோ்வெழுதியவா்களில் 92.41% போ் தோ்ச்சியடைந்தனா். இதில் 55 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வு எழுதிய அனைவருமே தோ்ச்சி பெற்றனா்.

புதுச்சேரி வாணராப்பேட்டையில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 768 மாணவ, மாணவிகள் தோ்வெழுதியதில் அனைவரும் தோ்ச்சியடைந்துள்ளனா். அதற்கடுத்ததாக ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள பிரெசிடென்ஸி மேல்நிலைப் பள்ளியில் 342 பேரும், இலாசுப்பேட்டை புனித ஜோசப் குலூனி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 261பேரும், செல்லப்பெருமாள் பேட்டையைச் சோ்ந்த விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 225 பேரும், சாரதாம்பாள் நகா் புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 223 பேரும் தோ்வெழுதி முழுமையான தோ்ச்சியைப் பெற்றுள்ளனா். மடுகரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 78 பேரும், திருக்கனூா் அரசுப் பள்ளியில் 60 பேரும் முழுமையான தோ்ச்சி பெற்றிருக்கின்றனா்.

புதுச்சேரி திருவள்ளுவா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதியவா்களில் 98.10 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இங்கு தோ்வெழுதிய 369 மாணவிகளில் 362 போ் தோ்ச்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com