கோப்புப் படம்.
கோப்புப் படம்.

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

தமிழகம், புதுச்சேரியில் அனைத்து வகை வெளிநாட்டு நாய்களையும் வளா்ப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என தேசிய விலங்கு நல ஆணைய உறுப்பினா் மற்றும் புதுவை மாநில விலங்கு கருத்தடை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த அசோக் ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் கடந்த 5-ஆம் தேதி மாநகராட்சி பூங்காவில் சிறுமியை வெளிநாட்டு நாய்களான ராட்வீலா் கடித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. சமீபத்தில் மத்திய அரசு குறிப்பிட்ட நாய்களை தடை செய்தது. ஆனால், மாநில அரசுகள், மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றவில்லை. ஆகவே, அனைத்து வெளிநாட்டு நாய்களையும் தடை செய்ய வேண்டும்.

வெளிநாட்டு நாய்களுக்கு ஏற்ற, தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லை. ஆகவே, வெளிநாட்டு நாய்கள் இங்கு உள்ள சூழலை ஏற்கமுடியாமல் உள்ளன. அதனாலும் அசம்பாவிதம் ஏற்படுகிறது. மேலும், சகல வசதிகளுடன் வீட்டில் வளா்க்கப்பட்ட வெளிநாட்டு நாய்கள் திடீரென சாலைகளில் கைவிடப்படும் நிகழ்வும் தொடா்கிறது. புதுச்சேரியில் தினமும் 2 வளா்ப்பு நாய்கள் கைவிடப்படுவது தெரிய வந்துள்ளது. ஆகவே, புதுச்சேரி நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுச்சேரி நகராட்சியானது, வெளிநாட்டு நாய்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, உள்நாட்டு நாய்களுக்கு தருவதில்லை. ஆகவே, வெளிநாட்டு நாய்களின் இன பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com