திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தினரைப் பெருமைப்படுத்த வேண்டும் : நீதியரசர் எஸ்.ஜெகதீசன்

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தினரை நாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று நீதியரசர் எஸ்.ஜெகதீசன் பேசினார்.
Updated on
1 min read

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தினரை நாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று நீதியரசர் எஸ்.ஜெகதீசன் பேசினார்.

திருக்கோவிலூரில் நடைபெற்று வரும் கபிலர் விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது:

இந்த விழாவில் "தமிழ் வளர்ச்சிச் செம்மல்' விருது பெற்ற கவிஞர் பெண்ணைவளவன், "சேவைச் செம்மல் விருது' பெற்ற முனைவர் இரா.சாந்தகுமாரி ஆகியோரின் சேவை அளப்பரியது. இவர்களின் சேவை தொடர வேண்டும்.

சேவை புரிவதற்காகவே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இருவரும். அதனாலேயே இங்கு அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தமிழுக்காகவும், மற்றொருவர் சமுதாயத்துக்காகவும் விருது பெற்றுள்ளனர்.

திருக்கோவிலூரில் 41-ஆவது ஆண்டாக பண்பாட்டுக் கழகம் கபிலருக்கு விழா நடத்தி வருகிறது. அதுவும் 4 நாள்கள் பெருவிழாவாக கொண்டாடுவது என்பது மிகவும் சிரமமான செயல்.

திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் சிறந்த முறையில் ஆண்டுதோறும் இவ்விழாவை நடத்தி வருவது பாராட்டத்தக்கது. இவ்விழாவை இவர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும். 50-ஆவது ஆண்டு கபிலர் விழாவில், இப்பகுதி மக்கள் அனைவரும் வந்து, பண்பாட்டுக் கழகத்தினரை வாழ்த்தி, பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக டி.வி.சிகாமணி, டி.வி.எஸ்.சண்முகம் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி, வாசுகி கண்ணப்பன், விஜயலட்சுமி ராமசாமி ஆகியோரின் இறைவணக்கப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, மயிலம் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் சு.திருநாவுக்கரசு தலைமையில் "எல்லாமும் கபிலரே' என்ற பொதுத் தலைப்பில் சங்கப் பலகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பா.சற்குருநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், நீதியரசர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் புகழரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் பண்பாட்டுக்கழக புரவலர் எம்.நந்தகோபால் முன்னிலையில் கவிஞர் பெண்ணைவளவனுக்கு "தமிழ் வளர்ச்சிச் செம்மல்' விருதும், முனைவர் இரா.சாந்தகுமாரிக்கு "சேவைச் செம்மல்' விருதும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழகத் தலைவர் தி.எஸ்.தியாகராஜன், செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், செயலர் கி.மூர்த்தி, பொருளர் கா.நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com