சக்தி மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி (புற்று) மாரியம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி (புற்று) மாரியம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடிப் பெருவிழா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் இக் கோயிலில் கடந்த 9.8.17-இல் தொடங்கிய ஆடிப்பெருவிழா உற்சவம் 13.8.17 வரை நடைபெறவுள்ளது. புதன்கிழமை (9.8.17) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதல், உறுதி எடுத்தல், விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
 வியாழக்கிழமை (10ஆம் தேதி) காலை அபிஷேக, ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை, தீப ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி மடத்திலிருந்து அம்மனுக்கு (தங்கைக்கு) அண்ணன் (பெருமாள்) வீட்டு சீர்வரிசை வருகைப் பிரிதல் நடைபெற்றது.
 வெள்ளிக்கிழமை (11ஆம் தேதி) காலை 7 மணிக்கு மஹா கணபதி ஹோமம், அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோமுகி நதிக்கரைக்கு சென்று அங்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூங்கரகம், அக்னி கலசம் பூஜை செய்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
 அம்மனுக்கு பால்அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சந்தனக் காப்பு செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com