முந்திரி பருப்பு ஆலையில் திருடியதாக மூவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்புகளை திருடி விற்பனை செய்ததாக, அதன் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி பருப்புகளை திருடி விற்பனை செய்ததாக, அதன் மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன்(41). உளுந்தூர்பேட்டை அருகே பாதூரில் முந்திரிக்கொட்டையை உடைத்து சுத்திகரிப்பு செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணிபுரிந்த பண்ருட்டி வட்டம் கீழிருப்பு பகுதியைச் சேர்ந்த மேலாளர் சத்தியஞானகுரு(26), மேற்பார்வையாளர் ஜெயக்குமார்(41), ஊழியர் தடுத்தாட்கொண்டூரைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த 80 கிலோ கொண்ட 10 மூட்டை முந்திரி பருப்புகளை திருடி விற்பனை செய்ததாக நிறுவனத்தின் உரிமையாளர் துரைமுருகன் திருநாவலூர் போலீஸில் புகார் செய்தார். திருடப்பட்ட முந்திரி பருப்புகளின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம். இந்த புகாரின் பேரில் அவர்கள் மூவரையும் காவல் ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com