கொடி நாள் நிதி வசூல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நல கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
நாடு முழுவதும் ஆண்டு தோறும் டிச.7-ஆம் தேதி முப்படைவீரர் கொடி நாள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.   இந்த தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு நாடு காத்த முன்னாள் படைவீரர்களை நினைவுகூரப்படும். 
இந்த கொடிநாளுக்காக நாடு முழுவதும்  நிதி திரட்டப்படுகிறது.  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் வசூல் தொடக்கி வைக்கப்பட்டது. வசூலிப்புப் பணியை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். இவ்வாண்டுக்கு, விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.71 லட்சத்து 98 ஆயிரத்து 10 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிகாரிகள் கொடி நாள் நிதி வழங்கினர்.  கடந்தாண்டு அதிகம் நிதி வசூலித்தவர்கள் பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா,  முன்னாள் படைவீரர் நல அலுவலர் அருண்மொழி,  முப்படை வீரர் வாரிய உபதலைவர் கர்னல்.ஜெயராஜ் மற்றும் அரசு 
அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com