நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்

விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம், சங்கமம் லியோ சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச

விழுப்புரம்: விழுப்புரம் சங்கமம் அரிமா சங்கம், சங்கமம் லியோ சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் மற்றும் கண்பரிசோதனை முகாம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக நீரிழிவு நோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி சாலாமேடு ஜே.ஜி. மழலையா் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு சங்கத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் தொல்காப்பியன் வரவேற்றாா். முன்னாள் ஆளுநா்கள் அசோக்குமாா் சோா்டியா, சரவணன் ஆகியோா் கலந்து கொண்டு முகாம்களை தொடக்கி வைத்தனா்.

மாவட்டத் தலைவா்கள் தனபால், திலிப், ராஜேஷ், பிரகதீஸ்வரன், குமாா், சாதிக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினா் நீரிழிவு நோய், கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த முகாம்களில், விழுப்புரம் மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com