சாலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தல்

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் சாலை விரிவாக்கத்தின்போது, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் சாலை விரிவாக்கத்தின்போது, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கழகம் கட்சி வலியுறுத்தியது.
இந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணிச் செயலர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில இணைப் பொதுச் செயலர் கந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம், துணைச் செயலர்கள் குமார், சுந்தரம், வீரன், குமரகுரு, நாதன், நந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் நாதமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விழுப்புரத்தில் கிழக்கு பாண்டி சாலை விரிவாகப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. சாலை விரிவாக்கத்துக்காக, வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்படுகின்றன. இந்தச் சாலையில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com