பெண்ணிடம் நூதன முறையில் நகை திருட்டு

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 4 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 4 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேடு பாரித் தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன்(28), விழுப்புரம் தபால் நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி(22). வியாழக்கிழமை இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், தன்னை அவரது கணவரின் நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டு, பேச்சு கொடுத்தார்.
பின்னர், குடும்பப் பிரச்னை தீருவதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். ஆகவே, தாலிச் சங்கிலியை கழற்றி, ஒரு சொம்பில் போட்டு, சாமி படத்தின் முன் வைக்குமாறு கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பி, தமிழ்ச்செல்வியும் அவ்வாறே செய்தார்.
 அப்போது, முகத்தை கழுவிவிட்டு வந்து, சாமியை வேண்டிக்கொண்டு தாலிச் சங்கிலியை எடுத்துக் கொள்ளுமாறு அந்த நபர் கூறியுள்ளார். அவர் கூறியபடி, முகத்தை கழுவ தமிழ்ச்செல்வி வீட்டுக்குள் சென்றபோது, அந்த நபர் தாலிச் சங்கிலியை திருடிக்கொண்டு, வீட்டை வெளிப்புறமாக தாழிட்டு, தப்பிவிட்டார்.
பிறகு வந்து பார்த்த தமிழ்ச்செல்விக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் 
விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com