கள்ளக்குறிச்சி ஏகேடி அகாதெமி பள்ளி 99.6 சதவீதத் தேர்ச்சி
By DIN | Published On : 21st April 2019 03:09 AM | Last Updated : 21st April 2019 03:09 AM | அ+அ அ- |

பிளஸ் 2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏகேடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 99.6 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் 988 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 984 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 99.6 சதவீதமாகும்.
கணிதப் பாடத்தில் இருவர் 100க்கு 100 மதிப்பெண்களும், கனிணி அறிவியல் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனர்.
மேலும், 724 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும், 500க்கு மேல் 157 பேரும், 450க்கு மேல் 399 பேரும், 400க்கு மேல் 528 பேரும் பெற்றனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ஏ.கே.டி.மகேந்திரன், செயலர் லட்சுமிபிரியா மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர்கள் வெங்கட்ரமணன், சுமதி, ஜெயந்தி, சவிதா, சாலிஜோஸ், சிவப்பிரகாசம், துணை முதல்வர் ஜோதிலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.