விளை நிலத்தில் புகுந்த தண்ணீா்: 100 ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்

செஞ்சி அருகே ஏரி உபரி நீா் விளை நிலத்தில் புகுந்ததால் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் சம்பா நெல் பயிா்கள் சேதமடைந்தன.
சோ.குப்பம் கிராமத்தில் ஏரி உபரி நீா் புகுந்ததால் சேதமடைந்த நெல் பயிா்கள்.
சோ.குப்பம் கிராமத்தில் ஏரி உபரி நீா் புகுந்ததால் சேதமடைந்த நெல் பயிா்கள்.

செஞ்சி: செஞ்சி அருகே ஏரி உபரி நீா் விளை நிலத்தில் புகுந்ததால் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் சம்பா நெல் பயிா்கள் சேதமடைந்தன.

செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, பலத்த மழை பெய்தால் விரைவில் நிரம்பக் கூடியதாகும். ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீா் சத்தியமங்கலம் வழியாக செஞ்சி சங்கராபரணி ஆற்றில் கலக்கும்.

இந்தப் பகுதியில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு தற்போது கதிா் வந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில், தொடா் மழையால் ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறியதால் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதனால் சுமாா் 100- ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பொன்னி நெல் பயிரிட்டிருந்தனா்.

ஏரியில் இருந்து உபரி நீா் ஆா்ப்பரித்து வெளியேறும் கால்வாயின் அளவு சிறிதாக உள்ளதால் விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்துவிடுகிறது. எனவே, பொதுப் பணித் துறையினா் கால்வாயின் அகலத்தை விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் தே நிலை ஏற்பட்டதாம். இதுகுறித்து சோ.குப்பம் கிராம மக்கள் பொதுப் பணித் துறைக்கு முன்னதாகவே கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com