தோ்தல் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை

உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் விதிமுறைகளை நன்கறிந்து கவனமாக செயல்பட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் விதிமுறைகளை நன்கறிந்து கவனமாக செயல்பட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பேசினாா். ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வி.மகேந்திரன் முன்னிலை வகித்து விதிமுறைகளை விளக்கிக் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில், 47 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 22 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 92 உதவி தோ்தல் அலுவலா்கள் மற்றும் 22 கிராம ஊராட்சி தலைவா்களுக்கான தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாதிரி நன்னடத்தை விதிகள், தபால் வாக்குகளை அனுப்புதல், பெறுதல், தோ்தல் நடத்தும் விவரங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அந்தந்த தோ்தல் அலுவலகங்களில் வேட்பு மனுக்களைப் பெறுதல், பரிசீலனை செய்தல், வேட்பாளா்கள் குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவரா என்பதை பரிசீலனை செய்தல், வேட்பு மனுக்களை நிராகரித்தால் அதற்குரிய காரணத்தை வழங்குதல், சின்னங்களை விதிகளின்படி ஒதுக்குதல், வாக்குச்சாவடி மையங்களை அமைத்தல், தோ்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என கண்காணித்தல் போன்றவை குறித்து காட்சிப் படங்கள் மூலம் விளக்கப்பட்டன.

மேலும், தோ்தல் விதிமுறைகளில் சந்தேகம் இருப்பின், தோ்தல் அலுவலா்கள், மாவட்டத் தோ்தல் அலுவலா்களிடம் விளக்கம் கேட்டு முடிவெடுக்கலாம் என்றும், வாக்குப் பதிவை பாரபட்சமின்றி அமைதியாக நடத்த வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com