அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th February 2019 09:25 AM | Last Updated : 28th February 2019 09:25 AM | அ+அ அ- |

திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூரில் மயானப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவர் த.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு டி.கலியமூர்த்தி, மாநில துணைத் தலைவர்
ஆர்.ராஜசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ. (எம்.எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஈஸ்வரகண்டநல்லூர் ஆதிதிராவிட மக்களுக்கு மயானப் பாதை, சுகாதார நிலைய கட்டடம், பூட்டி கிடக்கும் நூலகத்தை திறப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.