ஆதிதிருவரங்கம் கோயிலுக்கு மாணவர்கள் களப்பயணம்

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் 35 பேரும், ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் 24 பேரும்

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் 35 பேரும், ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் 24 பேரும் ஆதிதிருவரங்கம் கோயிலுக்கு களப்பயணமாக  வெள்ளிக்கிழமை காலை அழைத்துச் செல்லப்பட்டனர்.
களப்பயணத்தை அம்மையகரம் பள்ளியின் ஆசிரியர் 
பி.ராஜலட்சுமி தொடக்கி வைத்தார். களப்பயண ஏற்பாடுகளை அம்மையகரம் பள்ளியின் ஜே.ஆர்.சி. ஆசிரியரும் மாவட்ட கண்வீனர் து.மாயக்கண்ணன், ஜே.ஆர்.சி ஆலோசகர்கள்  பொ.சேகர், பி.மணிகண்டன்,  ஆசிரியர்அ.குணசேகரன் உள்ளிட்டோர் மாணவர்களுடன் சென்றனர். மாணவர்கள் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலின் வரலாறு, அமைவிடம் உள்ளிட்ட பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com