விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு

விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நகராட்சி சார்பில் நெகிழி (பிளாஸ்டிக் ) ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நகராட்சி சார்பில் நெகிழி (பிளாஸ்டிக் ) ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராமிய கலைக் குழுவினர் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் லட்சுமி தொடக்கி வைத்தார்.
திருச்சியைச் சேர்ந்த திருநங்கை பேராசிரியர் ராணி அம்மாள் தலைமையிலான கலைக்குழுவினர்,  நெகிழி ஒழிப்பு குறித்து, கலை நிகழ்ச்சியை நடத்தினர்.  
விழுப்புரம் நகரை நெகிழி 
இல்லாத நகரமாக மாற்ற வேண்டும்,  தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கேரி பேக்,  டீ கப், நெகிழி பை உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகை நெகிழி பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 
நெகிழி ஒழிப்பதன் நன்மைகள் குறித்து  பெற்றோர்களிடம் மாணவிகள் விளக்க வேண்டும் என்று, கலை நிகழ்ச்சிகள் வாயிலாக  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
நெகிழிக்கு மாற்றாக பாத்திரங்கள்,  துணி பை,  பாக்கு மட்டை தட்டுகள், வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ்,  புகழேந்தி,  ரமணன்,  சங்கர், சிவகாமி மற்றும் ஆசிரியர்கள்,  மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரை அடுத்த சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பேரணியை, பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இந்த பேரணியின்போது, நெகிழி ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் முழங்கி
னர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com