முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

விழுப்புரம் இ.எஸ். கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் இ.எஸ். கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
 இ.எஸ். கலை- அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். இ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். காரைக்கால் ஐ.சி.இ. தொழில் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் ரமேஷ்மோகன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
 அவர் பேசுகையில், உயர் கல்வியை தேர்வு செய்வதே மாணவர்கள் தங்களை வெற்றியாளராக உயர்த்துவதற்கான முதல் படியாகும். ஆகவே, சரியான இலக்கை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் சுயமதிப்பை வளர்த்துக்கொண்டால்தான் வெற்றி பெற முடியும். லட்சியங்களை, எண்ணங்கள்தான் தீர்மானிக்கின்றன.
 இதனால், நாம் உயர்ந்த எண்ணத்தையும், குறிக்கோள்களையும் வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வாழ்வில் வெற்றி காண வேண்டும் என்று அறிவுறுத்தினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தாவரவியல் துறைத் தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com