அரசு சேமிப்புக் கிடங்கு அரிசி மூட்டைகளில் வண்டுகளைத் தடுக்க நடவடிக்கை 

விழுப்புரம் அரசு சேமிப்புக் கிடங்கில் அரிசி மூட்டைகளில் வண்டுகளைத் தடுக்க தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விழுப்புரம் அரசு சேமிப்புக் கிடங்கில் அரிசி மூட்டைகளில் வண்டுகளைத் தடுக்க தொழிலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கடவுப்பாதை அருகே தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு, பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பொருள்கள், டாஸ்மாக் மது வகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவை தனித்தனியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 இந்தக் கிடங்கில் ஆயிரக்கணக்கான பொது விநியோகத் திட்ட அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வண்டுகள் உருவாவதைத் தடுக்கும் விதமாக, மூட்டைகளை பெரிய தார்ப்பாய்களை போட்டு தொழிலாளர்கள் பாதுகாப்பாக மூடி வருகின்றனர். மேலும், அவற்றின் கீழ் களிமண் கலவையைப் போட்டு, தார்ப்பாயின் உள்ளே காற்று புகாதவாறும், தார்ப்பாய்கள் பறக்காமல் இருக்கும் வகையிலும் மூடுகின்றனர்.
 அரிசி மூட்டைகளின் இடையே கீழ் பகுதியில் தார்ப்பாய்க்கு உள்ளே பூச்சிகளை எதிர்க்கும் (மாத்திரைகள்) மருந்துகளை வைத்துள்ளனர். இதனால், அந்த மருந்தின் நாற்றம் மற்றும் காற்றின்றி புழுக்கத்தால் வண்டுகள் மயங்கி விழுந்து உயிரிழந்துவிடும். மேலும், அதிகளவில் வண்டுகள் வருவதும் தடுக்கப்படுமாம்.
 இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: அரசு கிடங்குகளுக்கு வரும் பொது விநியோகத் திட்ட அரிசி மூட்டைகளை 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை இருப்பு வைப்பதால், அவற்றில் வண்டுகள் உருவாகின்றன. இதைத் தடுக்க, நீண்ட காலம் இருப்பு வைத்துள்ள மூட்டைகளை மாற்றி அடுக்கவும், உடனுக்குடன் அரிசியை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும் என்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com