வீடு கோரி பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் 

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர்கள் வீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர்கள் வீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டுக்கான விரிவான பழங்குடியின மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. மேலும், வாழ்வாதாராம் முன்னேறும் வகையில், திறனுக்கேற்ப தொழில் தொடங்க 10 நபர்களைக் கொண்ட 5 குழுக்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படவுள்ளது.
 இந்தத் திட்டத்தில் பயன்பெற, தகுதியான பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பயணிகள் தங்கள் புகைப்படம், சாதிச் சான்றிதழ், ஆதார் ஆட்டை, குடும்ப அட்டை, வீடு கட்டும் நிலத்தின் பத்திரம், பட்டா, தொலைபேசி எண், சரியான முகவரி போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
 விண்ணப்பங்களை திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com