விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் மழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே மாதம் தொடங்கி கடும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. கத்திரி வெயில் காலம் முடிந்த நிலையிலும் ஜூன் மாதத்தில் தொடர்ச்சியாக 105 டிகிரி பாரன்ஹீட் அளவில் சராசரியாக வெப்பம் பதிவாகி வருகிறது.  இதனால், மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் கடும் வெயிலும், அனல் காற்றும் வீசி வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடி குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலையில் காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்தது. அரை மணி நேரம் வரை தொடர்ந்த மழையால்,  சாலையில் மழை நீர் வழிந்தோடியது. மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு வார காலமாக கடும் வெயிலும், அனல் காற்றும் வீசியதால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு வியாழக்கிழமை பெய்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com