உலக யோகா தின விழா
By DIN | Published On : 23rd June 2019 03:11 AM | Last Updated : 23rd June 2019 03:11 AM | அ+அ அ- |

உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய குருகுலத்தில் யோகா தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, குருகுல மாணவ, மாணவிகளுக்கு பாரதி கலையரங்க மைதானத்தில் பல்வேறு யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், யோகாசனப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற, வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீசாரதா ஆஸ்ரம சந்நியாச சகோதரி யதீஸ்வரி சுத்தசத்வ ப்ரியா அம்பா, பரிசு அளித்தார். மேலும், யோகா குறித்து மாணவர்களிடையே அவர் சிறப்புரையாற்றினார்.