அரசுப் பள்ளிகளுக்கு கல்விச் சீர் அளிப்பு

வல்லம் ஒன்றியம், அகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஊர் மக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வல்லம் ஒன்றியம், அகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஊர் மக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் செல்வகுமாரி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரஷீதா வரவேற்றார். வல்லம் வட்டாரக் கல்வி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவா, ஆசிரியர் பயிற்றுநர் சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 அகலூர் ஜைனர் கோயிலில் இருந்து அகலூர் கிராம மக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களுடன் மேள, தாளம் முழங்க சீர்வரிசை எடுத்துச்சென்றனர். உதவி தலைமை ஆசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.
 எடையூரில்...: திருக்கோவிலூர் அருகே எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விச் சீர்வரிசை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார்.
 மேலாண்மைக்குழுத் தலைவர் சண்முகப்பிரியா, துணைத் தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார்.
 நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.முரளிகிருஷ்ணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன், ஓய்வுபெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தயானந்தன் ஆகியோர் பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துப் பேசினர்.
 பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் பள்ளிக்குத் தேவையான பொருள்களை கல்விச் சீர்வரிசையாக வழங்கினர்.
 திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரவீன்ஷங்கர், ஆசிரியர் பயிற்றுநர் ஏழுமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பட்டதாரி ஆசிரியர் உஷா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com