மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த மேலக்கொண்டூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர். 
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்ததாலும், எஞ்சியுள்ள ஓர் ஆசிரியையும் தேர்தல் தொடர்பான கூட்டத்துக்குச் சென்றுவிட்டதாலும், வியாழக்கிழமை மாற்றுப் பணியாக பள்ளிக்கு வந்த, வெள்ளம்புத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆயந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மரிய பிரான்சிஸ் மகன் மைக்கேல் காந்திராஜ் (50),  பள்ளியில் 4 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர், உறவினர், கிராம மக்கள் திரண்டு வந்து, ஆசிரியர் மைக்கேல் காந்திராஜை தாக்கி, பள்ளியில் வைத்துப் பூட்டி சிறை வைத்தனர். 
இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் விரைந்து வந்து, ஆசிரியர் மைக்கேல் காந்திராஜை மீட்டு, வேனில் அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைக் கைது செய்துதான் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் மைக்கேல் காந்திராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com