பள்ளிக்கு கல்விச் சீர்வரிசை

ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 


ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கல்விச் சீர்வரிசை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர்  மணிமொழி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்  கவுஸ். சாதிùக்ஷரிப் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக  மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் பங்கேற்றுப் பேசினார். சேலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ரூ.6,500 மதிப்பிலான நகலெடுப்புக் கருவியையும், ஆசிரியர் பிரபாகரன் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் விசிறிகளையும், ஊராட்சிச் செயலர் அன்பு ரூ.1,500 மதிப்புள்ள பொருள்களையும் பள்ளிக்கு சீர்வரிசையாக வழங்கினர். 
மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து ரூ.30 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், மின் சாதனக் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள், அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றை சீர்வரிசையாக வழங்கினர். தொடர்ந்து, வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதில், முதல் வகுப்பில் சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் மாலை மரியாதையுடன், மேள தாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். 
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள்  மாலினி, மணிகண்டன், ராதா, ரங்கராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com