தேர்தல் விளம்பரங்களை அனுமதி பெற்றே வெளியிட வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தேர்தல் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் அனுமதி பெற்றே நாளிதழ்கள், காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று விழுப்புரம்


விழுப்புரம்: தேர்தல் விளம்பரங்களை அரசியல் கட்சியினர் அனுமதி பெற்றே நாளிதழ்கள், காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான இல.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மீடியா சான்றிதழ்கள் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் இல.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை  தொடக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
விழுப்புரம் மாவட்டத்தில மக்களவைத் தேர்தலையொட்டி திறக்கப்பட்டுள்ள இந்த மீடியா சான்றிதழ்கள் மற்றும் கண்காணிப்புக்குழு அலுவலகம் மூலம் அனுமதி பெற்று வேட்பாளர்கள் விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக் காட்சிகளில் வெளியிட வேண்டும். அந்த விளம்பரத்துக்கான தொகை வேட்பாளரின் கணக்கில் வைக்கப்படும். 
அதேநேரத்தில், அனுமதியின்றி விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. இந்தக்குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்குகிறது.
மேலும்,   பணம் கொடுத்து வேட்பாளருக்கு சாதகமாக செய்திகள் வெளியிடப்படுகின்றனவா என்பது தொடர்பாகவும் கண்காணிக்கப்படும். 
வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க விடியோ கண்காணிப்புக் குழு உள்ளது. இந்தக் குழு வேட்பாளர்களின் கூட்டங்களை விடியோ பதிவு செய்யும். அங்கு பயன்படுத்தப்பட்ட கொடிகள், நாற்காலிகள் போன்ற அனைத்தும் வேட்பாளரின் செலவுக் கணக்கில் வைக்கப்படும். 
வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை தாக்கல் செய்யும்போது, தேர்தல் ஆணையம் எடுத்து வைத்துள்ள நிகழ் செலவுக் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
தனியார் கட்டடங்களில், உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யலாம். அந்தத் தொகை வேட்பாளரின் செல்வுக் கணக்கில் வைக்கப்படும்.
அரசியல் கட்சியினர் அச்சிட்டு வெளியிடும் சுவரொட்டிகளில் அச்சகத்தின் முகவரி இருக்க வேண்டும் என்றார் இல.சுப்பிரமணியன். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க...
மக்களவைத் தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. விதி மீறல்களை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் தனியாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.1800 425 3891 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்தக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். 
  இங்கு பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com