மூடப்பட்ட ராஜீவ் காந்தி சிலைகளை திறக்கக் கோரி காங்கிரஸார் மனு

தேர்தலையொட்டி விழுப்புரத்தில் மூடப்பட்ட ராஜீவ்காந்தி சிலைகளை அவரது நினைவு தினத்தையொட்டி திறக்க வேண்டும் என்று, காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலையொட்டி விழுப்புரத்தில் மூடப்பட்ட ராஜீவ்காந்தி சிலைகளை அவரது நினைவு தினத்தையொட்டி திறக்க வேண்டும் என்று, காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.சிவா தலைமையில் காங்கிரஸார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் ஆண்டு தோறும் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பிலும், பொது மக்கள் சார்பிலும், அன்றைய தினம் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
 மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, விழுப்புரம் காந்தி சிலை அருகேயுள்ள ராஜீவ் காந்தி சிலையும், நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையும் தேர்தல் துறையால் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மூடப்பட்ட இரு சிலைகளையும் வருகிற மே 21-ஆம் தேதி ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பதற்காக திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 அவர்களிடம் இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆலோசனைப் பெற்று, திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com