"ஏரி மண் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை'

சங்கராபுரம் வட்டத்தில் ஏரி மண் திருட்டில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் வட்டாட்சியர் பாண்டியன் எச்சரித்தார்.

சங்கராபுரம் வட்டத்தில் ஏரி மண் திருட்டில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் வட்டாட்சியர் பாண்டியன் எச்சரித்தார்.
 சங்கராபுரத்தை அடுத்த ஊராங்கானி கிராமத்தில் உள்ள மக்காசேனை ஏரியில் மண் திருட்டு நடைபெறுவது தொடர்பாக தினமணியில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் பாண்டியன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 மக்காசேனை ஏரியில் மண் திருட்டு நடைபெறுவது தொடர்பாக, அந்தப் பகுதியில் உள்ள செங்கல்சூளைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, தனிநபர் சிலர் நிலத்துக்கு மண் அடிப்பதற்காக வாங்கிய அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, செங்கல்சூளைகளுக்கு அதிகளவில் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்து, இனிவரும் காலங்களில் மண் திருட்டில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com