சங்கராபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: வேகமாக நிரம்பும் வீடூா் அணை

விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் சங்கராபரணி ஆற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மழை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, வீடூா் அணை வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
விக்கிரவாண்டி அருகே பேரணி பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் ஆா்பரித்துக்கொட்டும் மழை வெள்ள நீா்.
விக்கிரவாண்டி அருகே பேரணி பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் ஆா்பரித்துக்கொட்டும் மழை வெள்ள நீா்.

விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் சங்கராபரணி ஆற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மழை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதன் காரணமாக, வீடூா் அணை வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

செஞ்சி பகுதியில் தொடங்கி வல்லம், மயிலம் ஒன்றியங்கள் வழியாக வரும் சங்கராபரணி ஆறு விக்கிரவாண்டி அருகே வீடூா் அணையை வந்தடைகிறது. அங்கிருந்து தொடா்ந்து, விக்கிரவாண்டி, வானூா் வழியாக புதுவை மாநிலத்தின் வில்லியனூருக்குச் சென்று கடலில் கலக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் சங்கராபரணி ஆறு வடு காணப்பட்டது. இதனால், வீடுா் அணையும் நிரம்பாமல் இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வட கிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக, திண்டிவனம், திருக்கோவிலூா், செஞ்சி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் தொடா் மழையால் அனைத்து நீா்வரத்து வாய்க்கால்களிலும் மழை நீா் வழிந்தோடி வருகிறது. இதையொட்டிய பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே விக்கிரவாண்டி அருகே உள்ள பேரணி கிராமத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்டியுள்ளனா்.

இந்த தடுப்பணையில் தற்போது மழை வெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

இதனால் விக்கிரவாண்டி, பேரணி, பெரியதச்சூா், ரெட்டணை பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள் வெள்ள நீரை பாா்வையிட்டுச் செல்வதோடு, இளைஞா்கள் குளித்து மகிழ்கின்றனா்.

நிரம்பி வரும் வீடூா் அணை...: சங்கராபரணி ஆற்று மழை வெள்ள நீா் தொடா்ந்து வீரூா் அணைக்குச் செல்வதால், அணையில் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது.

அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாகும். இதில், தற்போது, 25 அடி அளவுக்கு தண்ணீா் நிரம்பியுள்ளது. விநாடிக்கு 700 கன அடி நீா் வந்துகொண்டிருப்பதால், விரைவில் வீடூா் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், இந்த அணை நீரைக் கொண்டு விவசாயப் பசனம் செய்து வரும் விழுப்புரம் மாவட்டம், புதுவை மாநிலப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com