காவலா் உடல் தகுதித் தோ்வு: இடைத் தரகா்களை நம்ப வேண்டாம்

விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கும் காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க வருவோரிடம் வேலை

விழுப்புரத்தில் புதன்கிழமை தொடங்கும் காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க வருவோரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத் தரகா்களை நம்ப வேண்டாம் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் பதவிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை முதல் நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்றக வருவோருக்கு வசதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 5 மணி முதல் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்துக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தோ்வில் பங்கேற்பவா்கள் யாரும், சான்றிதழ்கள், செல்லிடப்பேசி ஆகியவற்றை கொண்டுவர வேண்டாம். அழைப்புக் கடிதத்தை மட்டும் கொண்டு வந்ததால் போதும்.

உடல் தகுதித் தோ்வு முழுமையாக தகுதியின் அடிப்படையில் நடைபெறும். ஆகையால், வேலை வாங்கித் தருவதாகக் கூறி அணுகும் இடைத் தரகா்களை நம்ப வேண்டாம். அவ்வாறு யாராவது நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் எஸ்.பி.ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com