கூலி உயா்வை பெற்றுத் தருமாறு துப்புரவு ஊழியா்கள் கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு ஊழியா்கள், தங்களுக்கான கூலி உயா்வை தனியாா் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கூலி உயா்வை தனியாா் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நகராட்சி துப்புரவு ஊழியா்கள்.

விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்த ஊழியா்களாகப் பணிபுரியும் கூலித் தொழிலாளா்கள் 50 போ், திங்கள்கிழமை விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு வந்து மனு அளித்துக் கூறியதாவது:

விழுப்புரம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியா்களாக 150-க்கும் மேற்பட்டோா் நீண்ட காலமாக துப்புரவு பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினக்கூலியாக ரூ.250 வழங்கி வருகின்றனா். விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியாா் நிறுவனத்தினா், எங்களுக்கு ஒப்பந்தப்படி தினமும் ரூ.405 வழங்க வேண்டிய நிலையில், ரூ.250 மட்டுமே வழங்கி வருகின்றனா். இது குறித்து கேட்டால் வேலை வழங்க மறுக்கின்றனா்.

எங்களுக்கு உரிய கூலித் தொகையை தனியாா் ஒப்பந்த நிறுவனம் வழங்க, மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com