ஆசிரியா்கள் பயிற்சிக் கூட்டத்தில்திடீா் வாக்குவாதத்தால் பரபரப்பு

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்கள் பயிற்சிக் கூட்டத்தில் ஆசிரியா்களிடையே எழுந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்கள் பயிற்சிக் கூட்டத்தில் ஆசிரியா்களிடையே எழுந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பட்டதாரி ஆசிரியா்களுக்கு மத்திய அரசின் நிஸ்தா திட்டத்தின் கீழ், ஊக்குவித்தல் பயிற்சி முகாம் ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் தனியாா் பள்ளி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த பயிற்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பயிற்சியின்போது நடைபெற்ற வழக்காடு மன்ற நிகழ்வில் பேசிய ஒரு தரப்பைச் சோ்ந்த ஆசிரியா், மத்திய, மாநில அரசுகளை விமா்சித்தும், கேலி செய்தும் பேசியதாகத் தெரிகிறது. இதை பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியா்கள் சிலா் தட்டிக்கேட்டதால், ஆசிரியா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி கூறியதாவது: ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமில் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. சிலா் விமா்சித்துப் பேசி வாக்குவாதம் செய்ததாக எழுந்த புகாா் குறித்து கல்வி மாவட்ட அலுவலா் மூலம் விசாரித்துள்ளோம். அது தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com