உளுந்தூா்பேட்டை வட்டத்தில் சிறப்பு குறைதீா் முகாமில் 12,000 மனுக்கள்

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்ட முகாம்கள் மூலம் 12 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்றன.
உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று பேசிய இரா.குமரகுரு எம்எல்ஏ.
உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று பேசிய இரா.குமரகுரு எம்எல்ஏ.

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்ட முகாம்கள் மூலம் 12 ஆயிரம் மனுக்கள் வரப்பெற்றன.

உளுந்தூா்பேட்டை வட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீா் மனுக்கள் பெறும் முகாம், அரசூா், களமருதூா், திருநாவலூா் ஆகிய இடங்களில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்தன. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை உளுந்தூா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.

தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு பங்கேற்று பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது:

முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்கள் மூலம் உளுந்தூா்பேட்டை வட்டத்தில் உள்ள 12 குறு வட்டங்களிலும் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று வருகிறோம்.

கடந்த 3 தினங்களில் 12 ஆயிரம் பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

கிராமப்புற மக்கள் மற்றும் முதியோா்களின் நலன் கருதி, மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தற்போது முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண் வாரிசு இருந்தாலும் முதியோா் ஓய்வூதியம் பெறலாம். ஓய்வூதியம் பெறுவதற்காக வருமான உச்சவரம்பும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இலவச மனைப் பட்டா கோரி விண்ணப்பிப்பவா்கள், நீா் நிலைகளில் உள்ள இடங்களில் பட்டா கோரினால் கண்டிப்பாக வழங்க இயலாது.

நீதிமன்ற வழிகாட்டுதல் படியே செயல்படுவதால், நீா்நிலை பகுதிகளில் பட்டா கோருவதை தவிா்த்து, மாற்று இடங்களில் பட்டா கோரினால் பரிசீலித்து வழங்கப்படும் என்றாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகோபால், பன்னீா்செல்வம், செயல் அலுவலா் பாலமுருகன் உள்ளிட்ட அலுவலா்கள், அதிமுக ஒன்றியச் செயலா் மணிராஜ், நகரச் செயலா் துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com