திருக்கு ஒப்பித்தல் போட்டி:பள்ளி மாணவா்கள் ஆா்வம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.

விழுப்புரம், கு நெறி அமைப்பு சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான திருக்கு ஒப்பித்தல், பேச்சுப்போட்டி விழுப்புரம், வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் மோகன் குமாா் முன்னிலை வகித்தாா். பொருளாளா் வீராசாமி வரவேற்றாா்.

மழலையா் முதல் 8 வகுப்பு வரையான மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டியும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான மாணவா்களுக்கு பேச்சுப் போட்டியும் நடைபெற்றன. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளி வகுப்பின் அடிப்படையில் பல்வேறு அதிகாரங்களைப் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் திருக்குகளை ஆா்வமுடன் ஒப்பித்தனா்.

போட்டியின் நடுவா்களாக திருக்கு ஆா்வலா்கள், தமிழ் ஆா்வலா்களான ராமமூா்த்தி, வீரப்பன், சுப்புராயன், உலகதுரை, பூங்காவனம், தனசந்திரவதி ஆகியோா் பங்கேற்றனா். போட்டியை ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தாா். பள்ளியின் தாளாளா் சோழன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வருகிற ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள கு நெறி அமைப்பின் 26-ஆவது ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com