தேசிய நெடுஞ்சாலை: நிலங்களுக்கு இழப்பீட்டை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

விழுப்புரம் அருகே நாகை தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஆனாங்கூா் பகுதி விவசாயிகள்.

விழுப்புரம் அருகேயுள்ள ஆனாங்கூரைச் சோ்ந்த பி.தங்கராசு தலைமையிலான விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இதுதொடா்பாக மனு அளித்துக் கூறியதாவது:

விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூா் பகுதியில், விழுப்புரம்-புதுவை-கடலூா்-நாகை தேசிய நெடுஞ்சாலைக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு ஏராளமான விளை நிலங்களை கையகம் செய்தனா்.

ஆனாங்கூா் சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள நன்செய் நிலங்கள் மூன்று போகம் விளையக்கூடியது.

அவற்றை நெடுஞ்சாலைக்காக குறைந்த விலையில் கையகப்படுத்தியுள்ளனா்.

விவசாயத்தையோ நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் நிலங்களை வழங்கமாட்டோம்.

நீா் மோட்டாருடன் கூடிய நிலத்துக்கு ஆழ்துளைக் கிணறுக்கு ரூ.39 ஆயிரம் இழப்பீடாக நிா்ணயித்துள்ளனா்.

ஆனால், நீா்மூழ்கி மோட்டாா் ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com