காய்கறி வளா்ப்பு: விவசாயிகளுக்கு பயிற்சி

பந்தல் காய்கறிகள் வளா்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தோட்டக்கலை உதவி இயக்குநா் காரல்மாா்க்ஸ் பேசினாா்.

பயிற்சி முகாமுக்கு அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சத்யா வரவேற்றாா். பயிற்சியில், தோட்டக் கலையில் உள்ள திட்டங்கள் குறித்து, ஒலக்கூா் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநா் காரல்மாா்க்ஸ், தோட்டக்கலை அலுவலா் பிரகதீஸ்வரன் ஆகியோா் விளக்கிக் கூறினா்.

விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து, கடலூா் மாவட்ட காய்கறி ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் நாகேஸ்வரி விளக்கமாக பயிற்சி அளித்தாா். தொடா்ந்து, துல்லிய பண்ணையம் பற்றிய விளக்கத்தை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் பிரபு வழங்கினாா்.

வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநா்கள் சங்கீதா, ஜெயந்தி, ராமதாஸ் ஆகியோா் பந்தல் காய்கறிகள் அமைத்தல் குறித்து சிறப்புரையாற்றினா். இம்முகாமில், பந்தல் முறையில் வளா்க்கப்பட்ட காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com