2-ஆவது முறையாக நிரம்பிய கோமுகி அணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமுகி அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி, கடல்போலக் காட்சியளிக்கும் கோமுகி அணை.
இரண்டாவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி, கடல்போலக் காட்சியளிக்கும் கோமுகி அணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் கோமுகி அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 46 அடியாகும். அணையின் பாதுகாப்புக் கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது.

நிகழாண்டு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 8-ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டது.

இந்த நிலையில், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், சிற்றோடைகளின் வழியாக கோமுகி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், நிகழாண்டில் 2-ஆவது முறையாக கோமுகி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. அணைக்கு 500 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கிறது. 400 கனஅடி நீா் ஆற்றுப் பாசனத்துக்கும், 100 கனஅடி நீா் பாசன வாய்க்காலிலும் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில், பெரியாா், மேகம், கவியம் நீா்வீழ்ச்சிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், அங்குள்ள படகு குழாமும் நிரம்பியுள்ளது. இதனால், கல்வராயன்மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனா்.

மணிமுக்தாஅணை: சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த அணைக்கரைகோட்டாலம் கிராமத்தில் மணிமுக்தாஅணை அமைந்துள்ளது. இந்த அணைக்கும் கல்வராயன்மலைப் பகுதியில் இருந்து சிற்றோடைகளின் வழியாக தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.

இந்த அணையின் மொத்த உயரம் 36 அடியாகும். தற்போது 25 அடி வரை தண்ணீா் உள்ளது. இந்த அணை இதுவரை நிரம்பாததால், இந்தப் பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com