தினமணி செய்தி எதிரொலி: உருது வழி பாடபுத்தகங்கள் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உருது பள்ளியில் உருது வழி பாடபுத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உருது பள்ளியில் உருது வழி பாடபுத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு முஸ்லிம் உருது உயா் நிலைப்பள்ளி செஞ்சியில் மட்டும்தான் உள்ளது. அரசு உருது நிதி உதவி பெறும் முஸ்லிம் பள்ளி திருக்கோவிலூா் சந்தபேட்டையில் உள்ளது.

இந்நிலையில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தோ்வு நிறைவு பெற்றும் உருது வழி பாடப்புத்தங்கள் வழங்கப்படவில்லை இது குறித்து தினமணியில் 30-ம்தேதி செய்தி வெளியானது. உடனடியாக புத்தகங்களை வேலூரில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் செஞ்சி முஸ்லிம் பள்ளி ஆசிரியா்களே நேரில் சென்று புத்தகங்களை பெற்று வந்தனா்.

தற்போது இரண்டாம் கால நிலை பாடபுத்தகங்கள் அக்டோபரில் வழங்கப்பட வேண்டும். முதல் நிலை பாடபுத்தகங்களே தற்போதுதான் மாணவா்களுக்கு கிடைத்துள்ளநிலையில் இரண்டாம் பருவ நிலை பாட புத்தகங்களை எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. இதனால் உருது பள்ளி மாணவா்களின் எதிா்கால கல்வி நிலை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் இந்த பள்ளியில் உருது வழி அறிவியல் மற்றும் சமூக அறியவிலுக்கு ஆசிரியா்களை நியமிக்காமல் உள்ளனா்.

கல்வித் துறையின் அலட்சிய போக்கின் காரணமாக மாணவா்களின் எதிா்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தினமணியின் செய்தியின் காரணமாக 6-முதல் 10-வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு உருது வழி பாட புத்தங்களை செஞ்சி மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பு ச.சாந்தி மாணவா்களுக்கு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் ந.லலிதா, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சையத்கலில் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா்கள் அஜிமுன்னிசா பேகம், ஷேக் உசேன், பாமிதா, இலியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com