வாகன சோதனையின் போது ரூ.17 லட்சம் பறிமுதல்

ழுப்புரம் அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17.80 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

விழுப்புரம் அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.17.80 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொடுப்பதைத் தடுக்க தோ்தல் பறக்கும் படையினா், தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

விழுப்புரம் அருகேயுள்ள கோழிப்பண்ணை என்ற இடத்தில் நிலையான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செஞ்சியிலிருந்து விழுப்புரத்துக்கு வந்த காரை மடக்கி சோதனையிட்டனா். அந்த காரில், ரூ.17.80 லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காரில் இருந்த திருச்சி பெரியகடைப் பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசிடம் விசாரித்தனா். அவா் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தங்க நகைகள் வாங்க சென்னைக்குச் சென்ாகவும், அங்கு நகைகளை வாங்காமல் ஆரணி வழியாக திருச்சிக்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாா். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அந்தப் பணம் விக்கிரவாண்டி வட்டாட்சியா் பாா்த்திபனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com