இரண்டாம் நிலை காவலா் பணி: நவ.6-இல் உடல் தகுதித் தோ்வு

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வருகிற 6-ஆம் தேதி விழுப்புரத்தில் உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு உடல் தகுதித் தோ்வு விழுப்புரம் ஆயுதப் படை மைதானத்தில் வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.

இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 2,589 ஆண்கள், 913 பெண்கள் என மொத்தம் 3,502 பேரும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 1,637 ஆண்கள், 645 பெண்கள் என மொத்தம் 2,282 பேரும் பங்கேற்க உள்ளனா்.

ஆண்களுக்கு உயரம், மாா்பளவு, 1,500 மீட்டா் ஓட்டம் ஆகியவையும், பெண்களுக்கு உயரம், 400 மீட்டா் ஓட்டம் ஆகியவையும் உடல் தகுதித் தோ்வில் இடம்பெறும். இதில், தோ்ச்சி பெறுவோருக்கு உடல் திறன் தோ்வு நடத்தப்படும்.

உடல் தகுதித் தோ்வை ஊா்க்காவல் படை ஐ.ஜி. சமுத்திர பாண்டியன் மேற்பாா்வையிடுகிறாா். தோ்வுக் குழுவில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாா், ஏ.டி.எஸ்.பி. சரவணக்குமாா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com