விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த மதுப் புட்டிகள் பறிமுதல்: இருவர் கைது

கஞ்சனூர் அருகே விவசாய நிலத்தில் புதுவை மாநில மதுப் புட்டிகளைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கஞ்சனூர் அருகே விவசாய நிலத்தில் புதுவை மாநில மதுப் புட்டிகளைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கஞ்சனூர் அருகே உள்ள மேல்கரணை ஊராட்சி, விநாயகபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் குமரன் (46). வெங்கடேசன் மனைவி குமாரி (45). இவர்கள் புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை வாங்கி வந்து அந்தப் பகுதியில் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக, கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் வேலுமணி, திருநாவுக்கரசு ஆகியோர் விநாயகபுரம் கிராமத்துக்குச் சென்று சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது,  அங்குள்ள விவசாயி முருகனின் விவசாய நிலத்தில் திணை பயிர்களுக்கு இடையே மதுப் புட்டிகள் கொண்ட  அட்டைப் பெட்டிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
19 அட்டைப் பெட்டிகளில் 912 எண்ணிக்கையில் புதுவை மாநில மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும், அந்தப் பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாவையொட்டி, இந்த மதுப் புட்டிகளை குமரன், குமாரி ஆகியோர் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகள் அடங்கிய அட்டைப் பெட்டிகளை பறிமுதல் செய்த கஞ்சனூர் போலீஸார், அவற்றை பதுக்கி வைத்திருந்த குமரன், குமாரி ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com