திருவாமாத்தூர் கோயில் தேருக்கு கூடாரம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் தேருக்கு பாதுகாப்பு கூடாரம் அமைக்கும் திருப்பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.  

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் தேருக்கு பாதுகாப்பு கூடாரம் அமைக்கும் திருப்பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.  
விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் பிரசித்தி பெற்ற முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 42 அடி உயரத்தில் திருத்தேர் உள்ளது. கோயில் அருகே நிறுத்தப்பட்டுள்ள 
இந்தத் தேருக்கு பாதுகாப்பு கூடாரம் அமைப்பதற்கான திருப்பணி புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் 
ஆர்.குபேரன் தலைமை வகித்தார். விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.வி.திருமால் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், தேருக்கு கூடாரம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையைத் தொடக்கிவைத்தார் .
இதைத் தொடர்ந்து  சிறப்பு பூஜைநடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமலிங்கம், அர்ச்சகர்கள் அருணாசலம், மகேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com