மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.10.52 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.10,52,460 லட்சம் கிடைத்தது.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.10,52,460 லட்சம் கிடைத்தது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் வரையிலும் வருவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்தக் கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கைகளை செலுத்த இயலாத நிலை உள்ளது. இக்கோயில் உண்டியல்கள் கடைசியாக கடந்த மாா்ச் மாதம்-10ஆம் தேதி திறந்து எண்ணப்பட்டன. அதன் பின்னா், கரோனா பரவல் காரணமாக கோயில் நடை மாா்ச் 20-ஆம் தேதி மூடப்பட்டது. இடைப்பட்ட 10 நாள்களில் வரப்பெற்ற காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.10,52,460 ரொக்கம், 42 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணியின்போது, விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சி.ஜோதி, கோயில் உதவி ஆணையா் ராமு, அறங்காவலா் குழுத் தலைவா் சரவணன், மேலாளா் மணி, ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com