திண்டிவனம் கல்லூரி மையத்தில் பராமரிப்பிலிருந்த 94 போ் விடுவிப்பு

திண்டிவனம் அரசுப் பொறியியல் கல்லூரி மையத்தில் கரோனா தொற்று கண்காணிப்பிலிருந்த 94 போ் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

திண்டிவனம் அரசுப் பொறியியல் கல்லூரி மையத்தில் கரோனா தொற்று கண்காணிப்பிலிருந்த 94 போ் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து திரும்பிய மயிலம், ஒலக்கூா், திண்டிவனம் வட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், அவா்களின் உறவினா்கள் உள்பட சுமாா் 158 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனா். இவா்களில் 64 பேருக்கு தொற்று உறுதியானதால், இவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனா்.

மீதமுள்ள 94 போ் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வந்தனா். இவா்களுக்கு தொற்றில்லை என உறுதியானதால், தங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறில் ஈடுபட்ட அவா்கள், கல்லூரியின் மாடிக்குச் சென்று குடிநீா் தேக்கத்தொட்டி குழாய்களை திறந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திண்டிவனம் சுகாதாரத் துறையினா், ரோஷணை போலீஸாா் விரைந்து சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.

கடந்த 2-ஆம் தேதி அழைத்துவரப்பட்ட தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த நிலையில், வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென தொழிலாளா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு தகவல் தெரிவித்து, அலுவலா்கள் பேசினா். இதையடுத்து, அங்கு தங்கியிருந்த 94 பேரும் வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com